Regional02

உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறை, காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவ துறைத் தலைவர் கே.சுனிதா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரிடையே உடல் நலம் குறித்து பயிற்சி மருத்துவர்கள் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ.தேவராஜ், பா.பொன்னுத்தாய், மருத்துவ கல்லூரி சுகாதார கல்வி அலுவலர் டி.சங்கரசுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT