Regional02

உணவு பாதுகாப்பு உரிமம் பெற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், காலாவதியான உரிமத்துடனும் ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள், பேக்கரிகள், மளிகை கடைகள்,விநியோகஸ்தர்கள், உப்பு வணிகநிறுவனங்கள் போன்ற சில உணவு வணிக நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றிஇயங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். எனவே, உரிமமில்லா உணவு வணிக நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்த உணவு பாதுகாப்புத் துறையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உரிமம் பெறாமல்இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. அந்த கடையின் விற்பனையை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவு வணிகர்களும் தங்கள் உணவு பாதுகாப்புஉரிமம் காலாவதியாகியிருந்தாலோ அல்லது உரிமமே இல்லாமல் இருந்தாலோ உடனடியாக புதிய உரிமத்துக்கு www.foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்கள்உணவு வணிகத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT