கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலங்களில் சிறப்புமுகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர்அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரமாக நலவாரிய உறுப்பினர் அட்டை, எரிவாயு ரசீது, வீட்டுவரி ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும்.