Regional01

சமயபுரம் உண்டியலில் ரூ.75.47 லட்சம், 1.9 கிலோ தங்கம் :

செய்திப்பிரிவு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரூ.75,47,058 ரொக்கம், தங்கம் 1 கிலோ 880 கிராம், வெள்ளி 4 கிலோ 215 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 100 இருந்தன.

நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் தா.நந்தகுமார் (தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசுவாமி கோயில்), எஸ்.மோகனசுந்தரம், கோயில் மேலாளர் நா.ராசாங்கம், அறநிலையத்துறை ஆய்வர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் உடனி ருந்தனர்.

SCROLL FOR NEXT