தேசிய கூடோ போட்டியில் வெற்றிபெற்ற அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. பள்ளி மாணவர்களை, பள்ளி தாளாளர் ராஜசேகரன். முதல்வர் மகேஸ்வரி பாராட்டினர். 
Regional01

எஸ்எம்ஏ பள்ளி மாணவர்கள் - சர்வதேச கூடோ போட்டிக்கு தகுதி :

செய்திப்பிரிவு

இமாச்சலபிரப்தேசம் காந்தி கிராமில் தேசிய அளவிலான 11-வது தேசிய கூடோ தற்காப்புக் கலை விளையாட்டு போட்டியை சர்வதேச கூடோ கூட்டமைப்பு இந்தியா என்ற அமைப்பு நடத்தியது. இப்போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 44 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் பாவூர்சத்திரம் அருகே யுள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி 3-ம் வகுப்பு மாணவர் கிஷாந்த் கவிஷ் 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கமும் , 5-ம் வகுப்பு மாணவர் கிஷோர் கவிஷ் 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். வரும் 2022-ம் ஆண்டு மார்ச்சில் ஜப்பானில் நடைபெறும் சர்வதேச கூடோ போட்டியில் விளையாட இவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களை பள்ளி தாளாளர் ராஜசேகரன், பள்ளி முதல்வர் மகேஸ்வரி, அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT