இதுதொடர்பாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள், வன்னியகுல ஷத்ரியர் 10.5 சதவீதம், சீர்மரபினர் 7 சதவீதம், இதர பிரிவினர் 2.5 சதவீதம் என சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பதிவுதாரர்கள் தங்களுடைய சாதி மற்றும் உட்பிரிவு சரியாக உள்ளதா என www.tnvelaivaaipu.gov.in இணையதள முகவரியிலோ அல்லது கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்றோ சரிபார்த்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.