Regional03

தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனையில் துப்பாக்கி சிக்கியது :

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் உள்ள தங்கும் விடுதிகளில் மாநகர காவல்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். காந்திபுரம் முதல் வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் காட்டூர் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. அது விளையாட்டுப் போட்டிகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கி என அந்நபர் தெரிவித்தார். இருப்பினும் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT