கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சிசி டிவி கேமரா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் இரவில் பள்ளிக்குள் வருவதை தடுக்கவும், மாணவர்களின் நட வடிக்கைகளை கண்காணிக்கும் வகையிலும் பள்ளியின் 3 இடங்களில் ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டது. இதற்கான நிதியை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் நேரு இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து வழங்கியது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் புதிதாக, 10 புரவலர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் பிடிஏ நிர்வாகிகள், பெற்றோர் கலந்துகொண்டனர். இறுதியில் பள்ளி ஆசிரியர் அருள்குமார் நன்றி கூறினார்.