திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியில் வாக்குச் சாவடியில் முகக் கவசம் அணியாமல் நெருக்கமாக அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள்.படம் : ந.முருகவேல். 
Regional03

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - காற்றில் பறந்த கரோனா தடுப்பு நெறிமுறைகள் :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் எவரும் பின்பற்றாத நிலையே காணப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றது. அப்போதுகாலை முதலே வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து வரிசையாக நின்றனர். எவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததோடு, முகக் கவசமும் அணியில்லை. வாக்காளர்கள் தான் இந்த நிலை என்றால், வாக்குச் சாவடிக்குள் வேட்பாளர்களின் முகவர்களும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றால் தினந்தோறும் இலக்கு வைத்து அபராதம் விதிக்கும் காவல்துறையினர், நேற்று வாக்குச்சாவடிகளில் கரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் நிலையில் காணப்பட்ட வேட்பாளர்களின் முகவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT