பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகேயுள்ள ராஜ ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த கந்தசாமி மனைவி பரிமளம்(61). திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தார். கடந்த சில நாட்களுக்குமுன் வீட்டை பூட்டிவிட்டு கோவையிலுள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று காலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடந்தன. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. வீட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.