Regional02

அமெரிக்காவில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி : 3 பேர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் செவிலியர் பணிவாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.10.65 லட்சம் மோசடி செய்த 3 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாப்சிதா பீரிஸ் (42). வெளிநாட்டில் செவிலியருக்கான வேலைவாய்ப்பு உள்ளதா என்று இணையதளத்தில் இவர் தேடியுள்ளார். முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஜீன் என்பவரும், அமெரிக்க மருத்துவமனையின் மேலாளர் ஜார்ஜ் கென்னட், முகவர் அகமது ராஜேஷ் என்று கூறி 2 பேரும் அடுத்தடுத்து பேசியுள்ளனர். விசா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எனக்கூறி, பல்வேறு கட்டமாக ரூ.10.65 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் பாப்சிதா பீரிஸ் அனுப்பியுள்ளார். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் வேலை கிடைக்கவில்லை.

தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸில் பாப்சிதா பீரிஷ் புகார் அளித்தார். ஜீன், ஜார்ஜ் கென்னட், அகமது ராஜேஷ் ஆகிய 3 பேர் மீது, ஆய்வாளர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்தார்.

SCROLL FOR NEXT