Regional01

மாற்றுத்திறனாளியை கொன்றவர் கைது :

செய்திப்பிரிவு

வாழப்பாடி அருகே மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

வாழப்பாடி அடுத்த அக்ரஹார நாட்டாமங்கலம் வள்ளுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் மணிகண்டன் குள்ளம்பட்டி பகுதி பிரிவு ரோடு கரட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக காரிப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டனை பனங்காட்டைச் சேர்ந்த அருணாசலம் (25), திருமலை (22) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அருணாசலத்தை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில். மணிகண்டன் டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி மூவரும் மது குடித்தபோது அருணாசலமும், திருமலையும், மணிகண்டனை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். இதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்ததால், அவரை கொலை செய்ததாக அருணாசலம் தெரிவித்துள்ளார். தலைமறைவான திருமலையை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT