காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரு பிரபல துணிக்கடைகள் மற்றும் ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும் அவர்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள பிரபல துணிக்கடை, திருவள்ளுவர் தெருவில் உள்ள பிரபல துணிக்கடைகள், நாகலுத்து தெருவைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் நடத்தும் நிதி நிறுவனம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையை நடத்தினர்.
இவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வேறு கிளை நிறுவனங்கள், பண்ணை வீடுகள், நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் பல்வேறு நிறுவனங்கள் அதிக அளவு வருமானம் ஈட்டிவிட்டு,வருமான வரித் துறைக்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், முதல் கட்டமாக 3 முக்கிய நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து வந்த 50-க்கும்மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் 8 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்