Regional02

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் - அருங்காட்சியகம் அமையுமா? :

செய்திப்பிரிவு

தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு: முல்லை பெரியாறு அணை யைக் கட்டிய ஜான்பென்னி குவிக்குக்கு லோயர்கேம்ப் மணி மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், பிரிட்டன் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அவரது புகைப்படத் தொகுப்பை வரவழைத்து லோயர்கேம்ப் மணிமண்ட பத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தேனி புதிய பேருந்து நிலையத்தில் பென்னி குவிக்கின் சிலையை நிறுவ வேண்டும் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT