சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் அனைத்து வெள்ளாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், துப்பாக்கி கவுண்டர் (எ) உதயபெருமாள் கவுண்டரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மதுரை ஆதீனம் துப்பாக்கி கவுண்டர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மக்களி டம் துப்பாக்கி கவுண்டர் வாழ்க்கை வரலாறு குறித்து சொற் பொழிவாற்றினார். கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு, பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
பாஜக நிர்வாகி செல்வராஜ், பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் அன்னலட்சுமி, ஆறுமுகம்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.