சாத்தான்குளம் பகுதியில் கையில் நீண்ட கத்தியுடன் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ஒருவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில், ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், இவ்வாறு புகைப்படத்தை பதிவிட்டவர் சாத்தான்குளம் அருகேயுள்ள சிறப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்த ரூபன் கிதியோன் (42) என்பது தெரியவந்தது.
சாத்தான்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ரூபன் கிதியோன் மீது ஏற்கெனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.