காட்பாடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட எலுமிச்சை தோட்டத்தில் கள்ளத்தனமாக மின்சாரத்தை திருடி அமைத்த மின் வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்தனர். இதுதொடர்பாக இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அஸ்வினி (26). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாட்டை தேடிக்கொண்டு சென்றனர். இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், உறவினர்கள் சிலர் இருவரையும் தேடி நேற்று காலை சென்றனர். அப்போது, விஜயகுமார் என்பவருக்குச் சொந்த மான எலுமிச்சை தோட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடப்பதை பார்த்துள்ளனர். அருகில், பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது.
காட்டுப்பன்றி வேட்டை
இதையடுத்து, காட்பாடியைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளரான விஜயகுமாரை பிடித்து விசா ரித்தனர். அதில், அவர் நிலத்துக்கு வந்து சென்று ஒரு வாரம் ஆனதாக தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இளைஞர் கைது