Regional02

உதவிபெறும் பள்ளிகள் அலுவலர் சங்க விழா :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு உதவிபெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் இபுராகீம் அலி தலைமை வகித்தார். சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளரும், மாநில தலைவருமான ஜோசப் ஜான் ஸ்டீபன், உதவித் தலைவர் பூபாலன், துணைச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் காதர் சுல்தான் அலாவுதீன் வரவேற்றார்.

பரமக்குடி கே.ஜே.கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் குமார், மாவட்டக் கல்வி அலுவலர் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT