கரோனா பரவல் தடுப்பு விதிமீறினால் அபராதம் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கரோனா கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா பரவல் தடுப்பு விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
தொற்று பாதிப்புக்குள்ளான வர்கள் உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் இப் பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.