Regional01

கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடை பெற விண்ணப்பிக்கலாம் :

செய்திப்பிரிவு

திருச்சி விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கள்ளிக்குடி காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்தில் கடைகள் பெற வணிகர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கள்ளிக்குடி வணிக வளாகத்தில் வணிகர்களுக்கு 211 கடைகளும்(தரைத்தளம் 84, முதல் தளம் 127), உழவர் உற்பத்தியாளர்களுக்கு 49 கடைகளும் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. எனவே, விருப்பம் உள்ள வணிகர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் கடைகளை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை திருச்சி விற்பனைக் குழு, 199, மதுரை சாலை, திருச்சி- 8 என்ற முகவரியில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT