Regional02

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி - டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவாரூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அருள்மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன், துணைத் தலைவர் முத்துப்பாண்டி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட அள விலான அதிகாரிகள் மத்தியில் நிலவும் ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோத மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும். பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பெரம்பலூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT