மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர் ஷேக் அப்துல்லாவை பாராட்டிய கல்லூரி முதல்வர் சுகந்தி. உடன் பேராசிரியர்கள். 
Regional02

வலுதூக்கும் போட்டியில் முதலிடம் - பெரியார் ஈவெரா கல்லூரி மாணவருக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட அளவிலான சீனியர், ஜூனியர் மற்றும் மாஸ்டர்ஸ் வலுதூக்கும் போட்டிகள் நேற்று முன்தினம் மணப்பாறையில் நடை பெற்றன.

பல்வேறு பிரிவுகளில் நடத் தப்பட்ட இப்போட்டியில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர் ஷேக் அப்துல்லா 53 கிலோ ஜூனியர் பிரிவில் வலுதூக்குதல், பெஞ்ச் ப்ரஸ் ஆகிய 2 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த போட்டியின் ஜூனியர் பிரிவில் ‘வலிமையான வீரர்' என்ற பட்டத்தையும் பெற்றார். இதையடுத்து மாணவர் ஷேக் அப்துல்லாவை கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அப்போது உடற்கல்வி இயக்கு நர்(பொ) சங்கரநாராயணன், வரலாற் றுத்துறை தலைவர் ஜெரோம், பேராசிரியர்கள் பெர்னாண்டோ, பரமசிவம், செந்தில்குமார், செல்வநாதன், கஸ்தூரி திலகம் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT