Regional02

திருவாரூர் தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை : கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

திருவாரூரில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம் ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் நேதாஜி சாலை யில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில், தீ தடுப்பு பாதுகாப்பு சான்றிதழ், பட்டாசு உரிமங்களுக்கான சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களிடம் லஞ்சம் கேட்பதாக, திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர் தமிழரசி, சித்ரா தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ. 1.20 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT