ஓசூர்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஓசூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க வட்டத் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.துரை கோரிக்கை தொடர்பாக பேசினார். ‘புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வூதியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் னிவாசலு, மாவட்ட இணைச் செயலாளர் கெம்பண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.