Regional01

சுயேச்சை எம்எல்ஏ நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் - புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் இடபங்கீடு பேச்சுவார்த்தைகள் நிறுத்தம் : காத்திருப்பில் அரசியல் கட்சியினர்

செய்திப்பிரிவு

புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் உள்ளாட்சித் தேர்தல் இடபங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்காக அனைவரும் காத்துள்ள சூழலில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இது வரை இரு முறை மட்டுமே உள் ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி 4 பிராந்தியங்களிலும் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் வார்டு மறுசீரமைப்பு, வார்டுகள் இட ஒதுக்கீடு ஆகியவற்றில் குளறுபடி உள்ளதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன.

இதற்கிடையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கின. கூட்டணிக் கட்சிகளில் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்தது.

இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனுவில், வார்டு மறுவரையறையிலும், பட்டியலினத்தவ ருக்கு வார்டுகளை ஒதுக்கீடு செய்ததிலும் குளறுபடிகள் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தைமீற முடியாது. வழக்கு விசார ணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகக் கூறி அன்றைய தினம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

10 ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சியினர் கூட்டணி, இடபங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தநேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்ததால்கூட்டணி, இடபங்கீடு பேச்சுவார்த் தையில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சிகளிடமும், தேர்தல் போட்டியாளர்களிடமும் தொய்வு ஏற்பட்டுள் ளது. குளறுபடிகள் இருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகளே கருத்தாகதெரிவித்திருப்பதால், அரசியல்கட்சியினர் தங்கள் பேச்சுவார்த் தையை ஒத்தி வைத்துள்ளனர். தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக புதுச்சேரி அரசியல் கட்சியி னர் காத்திருக்கின்றனர். இத்தீர்ப் புக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோர் முடிவு செய்துள் ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்றுநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT