Regional01

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே உள்ள குமார மங்கலம் கிராமத்தின் மெயின் ரோட்டில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து கோயில் நிர்வாகி சந்தானராமனுக்கு தகவல் தந்தனர். இத னையடுத்து கோயில் நிர்வாகிகள் சந்தானராமன் மற்றும் கிராம மக்கள் கோயிலுக்கு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கிருந்தஉண்டியல் உடைக்கப்பட்டி ருந்தது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT