கடலூர் துறைமுகத்தில் பொது மக்கள் குவிந்து போட்டிப்போட்டுக் கொண்டு மீன் வாங்கி சென்றனர்.
கடலூர் துறை முகத்தில் மீன் வாங்குவதற்கு நேற்று ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும் பைபர் படகில் மீன் பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றனர். ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று மீன்களைவாங்கி சென்றனர். இதனால் துறைமுகப்பகுதியே திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது.
இந்நிலையில் கடலூர் எஸ்பி எஸ்.சக்திகணேசனின் அறிவு ரையின் படி கடலூர் துறைமுகம் லாஞ்சடியில் கடலூர் துறைமுக காவல் உதவி ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் மீன் வாங்கவந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கரோனா தடுப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் கடலூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.
புரட்டாசி மாதம் என்றாலும் நகர் முழுவதும் காலை முதல் இறைச்சி கடைகளில் வழக்கம் போல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றனர். இறைச்சிக்கடை முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து பாது காப்பாக இறைச்சி வாங்கி சென் றனர்.