கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Regional02

கடலூர், விழுப்புரத்தில் - மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று739 மையங்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் மீரா, வட்டாட்சியர் பலராமன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 1,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, சுகா தாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

SCROLL FOR NEXT