பரமக்குடி உழவர் சந்தை மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள். 
Regional02

பரமக்குடியில் சோதனை - கெட்டுப்போன 38 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பரமக்குடி நகர் பகுதியில் உள்ள மீன் கடைகளில் விற்கப்படும் மீன்களின் தரம் குறித்து ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத், ஆய்வாளர் சாகுல்ஹமீது, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துச்சாமி, வீரமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

உழவர் சந்தை மீன் கடைகள், சிறுவர் பூங்கா பின்புறம் உள்ள கடைகள், சின்னக் கடைத்தெரு, பழைய சாந்தி தியேட்டர் அருகிலுள்ள நகராட்சி மீன் கடையில் ஆய்வு நடைபெற்றது. இதில் 38 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தரமற்ற மீன்களை விற்கக் கூடாது என வியாபாரிகளிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT