Regional01

ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் பணி :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், திருவேங் கடம், வைப்பாறு கரையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 700 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவேங்கடம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் நந்தகுமார், வழக்கறிஞர் கர்ணன், ‌திருவேங்கடம் கிராம நிர்வாக அலுவலர் செல்வ முருகன் உள்ளிட்டோர் பனை விதைகளை நட்டனர்.

மேலப்பாளையம் பகுதியில் நத்தம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் பசுமை மேலப்பாளையம் அமைப்பைச் சேர்ந்த பக்கீர் முகமது லெப்பை, தாரிக் உள்ளிட்டோர் 100 பனை விதைகளை நட்டனர்.

SCROLL FOR NEXT