Regional01

பூங்கா, அணைகளை பார்வையிட தடை நீட்டிப்பு :

செய்திப்பிரிவு

தி.மலை: தி.மலை மாவட்டத்தில் அணைகள் மற்றும் பூங்காக்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான தடை உத்தரவு வரும் 10-ம் தேதி வரை நீட்டித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் அணைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை பொதுமக்கள் பார்வையிட கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு 3-வது மாதங்களாக, அக்டோபர் மாதத்திலும் தொடர்ந்து அமலில் உள்ளது.

இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அணைகளை பொதுமக்கள் பார்வையிட கடந்த 3-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நீச்சல் குளங்களுக்கு செல்லவும் அனுமதி கிடையாது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலைய அடைய உதவ வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT