‘‘இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங் களையும் ஒப்பிட்டு பார்த்தால் தமி ழகம்தான் முதல் மாநிலம் என்ற நிலைக்கு வரவேண்டும். ஒளிமயமான தமிழகம் அமைய பாடுபடுவேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
முன்னதாக, அவரை ஊராட்சித் தலைவர் முருகானந்தம் வரவேற்றார். அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், முதல்வரின் தனி செயலரும் 2006-ல் பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தேர்தலை வெற்றி கரமாக நடத்திய அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன், பஞ்சாயத்து துணைத் தலைவர் லட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர் தங்கபாண்டி கிராமசபையில் விவாதிக்க வேண்டிய தீர்மானங்களையும் பஞ்சாயத்து வரவு, செலவுக் கணக்குகளையும் சமர்ப் பித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக கிராமசபை கூட்டங் களை நடத்த முடியவில்லை. இந்த நாட்டையே கிராம ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் விருப்பம்.
தென் ஆப்பிரிக்காவில் கோட், சூட் அணிந்து வழக்கறிஞராக பணியாற்றிய காந்தி, இந்த மதுரை மண்ணுக்கு வந்தபோதுதான், இங் குள்ள மக்களின் ஏழ்மை நிலையைப் பார்த்து அரை ஆடை அண்ணலாக மாறினார். மகாத்மா காந்தியின் மனதையே மாற்றிய மண் மதுரை என்பது பெருமைக்குரிய விஷயம். முதல்வரான பிறகு எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு போகிறேன். ஆனால், எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாக இந்த பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டம்தான் இருக்கும்.
பஞ்சாயத்து தேர்தல்
2006-ம் ஆண்டு மதுரை மாவட் டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் உள்ளிட்ட சில கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவியது. அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட வரலாறு நிகழ்ந்தது. ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தலை நடத்தியாக வேண்டும். அப்போது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், முதல்வராக கருணாநிதியும் இருந்தார். உள்ளாட்சித் துறைச் செயலரான அசோக்வர்தன் ஷெட்டியும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதய சந்திரனும் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி இந்த பஞ்சாயத்தில் தேர் தலை நடத்தினர்.
இந்த தகவலை அறிந்த முதல்வர் கருணாநிதி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தினார். நான் இங்கு வந்ததற்கும் இதுதான் காரணம். சமத்துவம்தான் வளர்ச்சிக்கு அடிப்படை. ஒற்றுமையில்லாத சமூகத் தில் வளர்ச்சி இருக்காது. தமிழகத்தில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்கப் பாடுபடுவேன். அதுதான் காந்தி காண விரும்பிய கிராம ராஜ்ஜியம். அதை நாம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.
எவ்வித பாகுபாடு பார்க்காமல் ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமி ழகம் அமைவதற்கு நான் பாடு படுவேன். ‘நம்பர் 1 முதல்வர்’ என்று கூறுகிறார்கள். அதில் எனக்கு பெருமை இல்லை. நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழகம்தான் முதல் மாநிலம் என்று சொல்லும் நிலைக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும். அதில் பாப்பாபட்டி பஞ்சாயத்தின் பங்கும் இடம்பெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வரலாற்றிலேயே முதல்முறை