கடலூர் காதிகிராப்டில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடக்கி வைத்தார். 
Regional02

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் :

செய்திப்பிரிவு

கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதைசெலுத்தி, கதர்விற்பனையை நேற்று ஆட்சியர் மோகன் தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.82.11 லட்சம் கதர் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி, காதிகிராப்ட் சிவனுபாண்டியன், நரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதே போல் கடலூர் பாரதி சாலையிலுள்ள காதிகிராப்டில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பேசியது: கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் காதி கிராப்டில் ரூ.141.40 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு விற்பனைக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக கடலூர் பெருநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கதர் கிராமதொழில்கள் உதவி இயக்குநர் தேவமனோகரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில்ரூ.141.40 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT