விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ஹர் சகாய் மீனா தலைமையில் நடைபெற்றது. அருகில் ஆட்சியர் மோகன் உள்ளார். 
Regional02

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள - போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி :

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை குறித்துவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் அனைத் துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலையில் இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் முதன்மை செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ஹர் சகாய் மீனா தெரிவித்தது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி போர்க்கால அடிப்படையில் அனைத்துமாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத் திற்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.

பொதுப்பணித் துறை, நெடுஞ் சாலைத்துறை, மின்வாரியம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத் துறை, வேளாண் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணிகளை சரிவர மேற்கொள்வதன் மூலம் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை முழுவது மாக கட்டுப்படுத்தி பொதுமக்களை காத்திட முடியும் என்றார்.

SCROLL FOR NEXT