Regional01

318 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நான்காவது முறையாக இன்று (3-ம் தேதி) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் 318 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று காலை 7 மணி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT