தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 
Regional03

தூத்துக்குடி துறைமுகத்தில் - மரக்கன்றுகள் நடும் விழா :

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா மற்றும் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சிதம் பரனார் துறைமுக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது.

துறைமுக வளாகத்தில் 620 ஏக்கர் நிலப்பரப்பு பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. 7.6 ஏக்கர் நிலப்பரப்பில் புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. துறைமுகத்தில் காற்றின் தரத்தை உயர்த்தவும், கார்பன் வெளியேற்றம் மற்றும் ஒலி மாசை குறைக்கவும் 10,000 மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுக பள்ளி வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில், துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT