Regional03

மது விற்ற 103 பேர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதில், மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 68 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,542 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 நாட்களில் மது விற்பனை செய்த 103 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 1,850 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT