Regional01

தேர்தல் பாதுகாப்பு பணி ஆலோசனைக் கூட்டம் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் கட்டுப்பாட்டு காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமை வகித்து பேசும்போது, ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கும், மாவட்ட காவல் அலுவலகத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பணியின்போது காவலர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்’’ என அறிவுரை வழங்கினார்.

SCROLL FOR NEXT