Regional01

பெரியகுளம் பராமரிப்புக் குழு கூட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 27-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் பொதுமக்கள் பங்களிப்பில் அண்ணா பல்கலைக் கழக தொழில்நுட்ப ஆலோசனைப்படி மாநகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தூர்வாரி பராமரிக்க பட்டு வருகிறது.

இதன் பராமரிப்புக்குழுவின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வெள்ளையன் வரவேற்றார்.

கூட்டத்தில் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சாமி நல்லபெருமாள், கவுரவ ஆலோசகர்கள் பி.டி.சிதம்பரம், சண்முக சுந்தரம், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT