அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு குளிர் சாதனப்பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. படம்: வி.எம்.மணிநாதன். 
Regional02

குளிர்சாதன வசதி பேருந்துகள் இயக்கம் :

செய்திப்பிரிவு

வேலூரில் இருந்து குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அச்சத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது, கரோனா பரவல் குறைந்துள்ளதால் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

எனவே, மீண்டும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 25 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வேலூரில் இருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT