Regional01

பவானிசாகர் அணைப்பகுதியில் சுற்றும் யானைகளால் மக்கள் அச்சம் :

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக் கூட்டம், அணையின் நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள முட்புதர் காட்டில் முகாமிட்டுள்ளன.

நேற்று முன்தினம் நீரேற்று நிலையங்கள் உள்ள பகுதியில், இரண்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இதனால், மக்கள் அச்சமடைந்தனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT