Regional01

கடலூர் மாவட்டத்தில் நாளை - 683 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் :

செய்திப்பிரிவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் நாளை(அக்.2) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ள இடம், தேதி, நேரம் மற்றும் விவாதிக் கப்படவுள்ள பொருட்கள் பற்றி தண்டோரா போட வேண்டும்.

சில ஊராட்சிகளுக்கு விலக்கு

தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்களும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நடை பெறும் ஊராட்சி ஒன்றியங்களான பண்ருட்டி, மேல்புவனகிரி, குமராட்சி, விருத்தாசலம் மற்றும் முஷ்ணம் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ள ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT