Regional02

டிஜிட்டல் நூலக விழிப்புணர்வு கருத்தரங்கம் :

செய்திப்பிரிவு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் நூலகம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரிச் செயலாளர் கே.எஸ்.காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நூலகர் எஸ்.சிந்தன் வரவேற்றார். முதல்வர் சி.மதளைசுந்தரம் வாழ்த்துரை ஆற்றினார். மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி நூலகர் எஸ்.கோபாலகிருஷ்ணன் இணையவழி மூலம் சிறப்புரையாற்றினார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின்முறை தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், துணை முதல்வர் என்.மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,

SCROLL FOR NEXT