Regional02

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - ஏற்பாடு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 உள்ளாட்சி பதவிக்கான தேர்தல் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 26 பதவிகளுக்கு மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 6 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 16 பேர், 16 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 43 பேர் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

ஊராட்சித் தலைவர் பதவிக்கு 23 வாக்குச்சாவடிகளில் 10,168 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 வாக்குச்சாவடிகளில் 4,765 பேர் என மொத்தம் 14,933 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 38 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 152 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 2 கட்டமாக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 3-வது கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வாக்குச்சீட்டுக்களும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT