திருநெல்வேலியில் அரசு விரைவு பேருந்துகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.படம் அ. ஷேக்முகைதீன் 
Regional01

தென்மாவட்டங்களில் இருந்து இன்றுமுதல் - அரசு ஏசி பேருந்துகள் இயக்கம் :

செய்திப்பிரிவு

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு 30 அரசு குளிர்சாதன பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட தடையால் கடந்த பலமாதங்களாக இயக்கப்படால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு குளிர்சான விரைவு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அப்பேருந்துகளை தயார்படுத்தும் பணியில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். பேருந்துகளை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து, பராமரிப்பு பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 30 குளிர்சாதன பேருந்துகள், சென்னை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT