Regional02

ஆட்டோ கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் வசித்தவர் பிரதிஷ் (25). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர், சென்னையில் இருந்து கீழ் பென்னாத் தூருக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு வந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அவலூர் பேட்டை சாலையில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி ஆட்டோ கவிழ்ந் துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரதிஷை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதிஷ் உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் முருகன், காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT