உத்தனப்பள்ளி அருகே கோயிலில் திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள பெல்லட்டி கிராமத்தில் லகுமம்மா கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இக்கோயிலின் உள்ளே நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடினார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள், மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மலைத்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (42) என தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கணேசனை கைது செய்தனர்.
வீட்டில் திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.