Regional01

காப்பக குழந்தைகள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு :

செய்திப்பிரிவு

தேனியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

ஆட்சியர் பேசியதாவது: காப்ப கங்களில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அரசு நிதியைப் பெற வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் தகவல்களை இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் என்று கூறினார்.

நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம், காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT