Regional01

ராசிபுரம் அடுத்த வடுகத்தில் - அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் :

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை தேசிய தரவு தளத்தில் இணைக்கு சிறப்பு முகாம் ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில் நடைபெற்றது.

முகாமுக்கு, நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர் தலைமை வகித்துப் பேசியதாவது:

சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், கய தொழில் செய்யவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தெரு வியாபாரிகள், ரிக் ஷா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள். வீட்டு பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அனைவரும் தேசிய தரவு தளத்தில் இணைக்கப்பட்டு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதன்மூலம் மத்திய அரசால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் செங்கல் குளை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT