பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் நேற்று குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சில்லக்குடி மேத்தால் காட்டுக்கொட்டகையைச் சேர்ந்த துரைசாமி மகன் செல்லமுத்து(35) என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில், அவரது வீட்டின் அருகே மாட்டுச் சாணம் கொட்டும் இடத்தில் மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் கண்டறிந்த போலீஸார், அவற்றை அங்கேயே அழித்தனர். தொடர்ந்து, செல்லமுத்துவை கைது செய்து, சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.